Monday, September 27, 2010

ஹரா பரா கபாப் (Hara Bhara KEBAB)




தேவையான பொருட்கள்

கேரட்                                                      20g
பச்சை பட்டாணி                              20g
உருளைக் கிழங்கு                           20g
காலிஃப்ளவர்                                       20g
பன்னீர் (துருவிய‌து)                        20g
பச்சை மிளகாய்                                  5g
வெங்காயம்                                         20g
பொதினா                                     5கிளை
கொத்தமல்லி                          10கிளை
எலுமிச்சைசாறு                   சிறித‌ள‌வு
முந்திரி பருப்பு                                   5No
மைதா                                                     10g
Bread தூள்                                               10g
எண்ணெய்                               பொறிக்க‌
உப்பு                                தேவைக்கேற்ப‌

செய்முறை


பொதினா,கொத்தமல்லி பச்சை மிளகாயை கெட்டியாக அரைத்துக்கொள்ள‌வும்
உருளைக்கிழங்கு, பச்சைபட்டாணி, கேரட், காலிஃப்ளவர் பொடியாக நறுக்கி, நீராவியில் அவித்து அல்லது வேகவைத்து, நீரை சுத்தமாக வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை சிறிதாக வெட்டி, வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து, உப்பு மைதா இட்டு, பன்னீர், எலுமிச்சைசாறு சேர்த்து கட்லட் மசாலா போன்று தயாரித்து, சிறுவட்டமாக்கி, Bread தூளில் பிரட்டி, அதன்மேல் முந்திரி பருப்பை வைத்து எண்ணெயில் பொறித்தெடுத்து Carnishவைத்து பரிமாரவும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.

The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/10/24/stories/2009102452630800.htm
http://en.petitchef.com/recipes/starter/hara-bhara-kebab-fid-997136

நம் கவன‌த்திற்கு:
நாளொன்றுக்கு நமக்கு 3Cubs(அதாவது 3மேசைக்கரண்டி)சர்க்கரை போதுமான‌து. நாம் அன்றாட‌ம் உண்ணும் உணவு,காய்க‌றி, ப‌ழ‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே போதுமான சர்க்கரை நிறைந்திருப்பதை நினைவில் கொள்க‌.

நன்றி

Tuesday, September 7, 2010

ம‌ல‌பார் மீன் குழ‌ம்பு (Malabar Fish curry)

தேவையான‌ பொருட்க‌ள்

வ‌ஞ்சிரை மீன்(துண்டுக‌ளாக‌)                          150g
தேங்காய் எண்ணெய்                                            20ml
சோம்பு                                                                            2g                                                                    

வெந்த‌ய‌ம்                                                                     2g
சீர‌க‌ம்                                                                               3g
பெரிய‌ வெங்காய‌ம்                                                40g
சின்ன‌ வெங்காய‌ம்                                                 20g
த‌க்காளி                                                                         30g
பூண்டு விழுது                                                             5g
ப‌ச்சை மிள‌காய்                                                          2g
ம‌ஞ்ச‌ள் தூள்                                               1 சிட்டிகை
மிள‌காய் தூள்                                                             10g  
ம‌ல்லி தூள்                                                                   10g 
புளிக் க‌ரைச‌ல் கெட்டியாக‌                               100ml  
தேங்காய் அரவை                                                    25g
உப்பு                                                        தேவைக்கேற்ப‌

செய்முறை
வாண‌லியில் எண்ணெய் விட்டு, சோம்பு, சீர‌க‌ம், வெந்த‌ய‌ம், க‌ருவேப்பிலையிட்டு  வெடிக்க‌விட்டு சின்ன‌வெங்காய‌ம் சேர்த்து, பின் க‌ட்ட‌மாக‌ வெட்டிய‌ பெரிய‌வெங்காய‌ம் சேர்த்து பொன்னிற‌மாக‌ வ‌த‌க்கி, பூண்டு விழுது சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி, ம‌ஞ்ச‌ள்தூள், மிள‌காய்த்தூள், ம‌ல்லித்தூள் சேர்த்து கிண்டி பின் த‌க்காளி,ப‌ச்சை மிள‌காய் சேர்த்து வ‌த‌க்கிய‌பின் புளிக்க‌ரைச‌ல் சேர்த்து கொஞ்ச‌ம் த‌ண்ணீர் சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌விட‌வும்.பின் தேங்காய் அர‌வை,மீன் ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌ சேர்த்து, உப்பிட்டு சிறுதீயில் வேக‌விட்டு இற‌க்க‌வும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.

The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/05/23/stories/2009052352000800.htm
http://en.petitchef.com/recipes/main-dish/malabar-fish-curry-fid-997135
 
ந‌ம் க‌வ‌ன‌த்திற்கு:

நாளொன்றுக்கு நமக்கு (11வயதுக்குமேல் மற்றும் பெரியவர்கள்)  6 கிராம் உப்பு போதுமான‌து. நாம் அன்றாட‌ம் உண்ணும் காய்க‌றி, மீன், ப‌ழ‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே உப்பு நிறைந்திருப்ப‌தால், உப்பின் அள‌வைக் குறைத்து இர‌த்த‌ அழுத்த‌ம் ம‌ற்றும் இத‌ய‌ நோய்க‌ளில் இருந்து த‌ப்பிக்க‌லாமே. 

ந‌ன்றி