Monday, September 27, 2010

ஹரா பரா கபாப் (Hara Bhara KEBAB)




தேவையான பொருட்கள்

கேரட்                                                      20g
பச்சை பட்டாணி                              20g
உருளைக் கிழங்கு                           20g
காலிஃப்ளவர்                                       20g
பன்னீர் (துருவிய‌து)                        20g
பச்சை மிளகாய்                                  5g
வெங்காயம்                                         20g
பொதினா                                     5கிளை
கொத்தமல்லி                          10கிளை
எலுமிச்சைசாறு                   சிறித‌ள‌வு
முந்திரி பருப்பு                                   5No
மைதா                                                     10g
Bread தூள்                                               10g
எண்ணெய்                               பொறிக்க‌
உப்பு                                தேவைக்கேற்ப‌

செய்முறை


பொதினா,கொத்தமல்லி பச்சை மிளகாயை கெட்டியாக அரைத்துக்கொள்ள‌வும்
உருளைக்கிழங்கு, பச்சைபட்டாணி, கேரட், காலிஃப்ளவர் பொடியாக நறுக்கி, நீராவியில் அவித்து அல்லது வேகவைத்து, நீரை சுத்தமாக வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை சிறிதாக வெட்டி, வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து, உப்பு மைதா இட்டு, பன்னீர், எலுமிச்சைசாறு சேர்த்து கட்லட் மசாலா போன்று தயாரித்து, சிறுவட்டமாக்கி, Bread தூளில் பிரட்டி, அதன்மேல் முந்திரி பருப்பை வைத்து எண்ணெயில் பொறித்தெடுத்து Carnishவைத்து பரிமாரவும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.

The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/10/24/stories/2009102452630800.htm
http://en.petitchef.com/recipes/starter/hara-bhara-kebab-fid-997136

நம் கவன‌த்திற்கு:
நாளொன்றுக்கு நமக்கு 3Cubs(அதாவது 3மேசைக்கரண்டி)சர்க்கரை போதுமான‌து. நாம் அன்றாட‌ம் உண்ணும் உணவு,காய்க‌றி, ப‌ழ‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே போதுமான சர்க்கரை நிறைந்திருப்பதை நினைவில் கொள்க‌.

நன்றி

Tuesday, September 7, 2010

ம‌ல‌பார் மீன் குழ‌ம்பு (Malabar Fish curry)

தேவையான‌ பொருட்க‌ள்

வ‌ஞ்சிரை மீன்(துண்டுக‌ளாக‌)                          150g
தேங்காய் எண்ணெய்                                            20ml
சோம்பு                                                                            2g                                                                    

வெந்த‌ய‌ம்                                                                     2g
சீர‌க‌ம்                                                                               3g
பெரிய‌ வெங்காய‌ம்                                                40g
சின்ன‌ வெங்காய‌ம்                                                 20g
த‌க்காளி                                                                         30g
பூண்டு விழுது                                                             5g
ப‌ச்சை மிள‌காய்                                                          2g
ம‌ஞ்ச‌ள் தூள்                                               1 சிட்டிகை
மிள‌காய் தூள்                                                             10g  
ம‌ல்லி தூள்                                                                   10g 
புளிக் க‌ரைச‌ல் கெட்டியாக‌                               100ml  
தேங்காய் அரவை                                                    25g
உப்பு                                                        தேவைக்கேற்ப‌

செய்முறை
வாண‌லியில் எண்ணெய் விட்டு, சோம்பு, சீர‌க‌ம், வெந்த‌ய‌ம், க‌ருவேப்பிலையிட்டு  வெடிக்க‌விட்டு சின்ன‌வெங்காய‌ம் சேர்த்து, பின் க‌ட்ட‌மாக‌ வெட்டிய‌ பெரிய‌வெங்காய‌ம் சேர்த்து பொன்னிற‌மாக‌ வ‌த‌க்கி, பூண்டு விழுது சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி, ம‌ஞ்ச‌ள்தூள், மிள‌காய்த்தூள், ம‌ல்லித்தூள் சேர்த்து கிண்டி பின் த‌க்காளி,ப‌ச்சை மிள‌காய் சேர்த்து வ‌த‌க்கிய‌பின் புளிக்க‌ரைச‌ல் சேர்த்து கொஞ்ச‌ம் த‌ண்ணீர் சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌விட‌வும்.பின் தேங்காய் அர‌வை,மீன் ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌ சேர்த்து, உப்பிட்டு சிறுதீயில் வேக‌விட்டு இற‌க்க‌வும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.

The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/05/23/stories/2009052352000800.htm
http://en.petitchef.com/recipes/main-dish/malabar-fish-curry-fid-997135
 
ந‌ம் க‌வ‌ன‌த்திற்கு:

நாளொன்றுக்கு நமக்கு (11வயதுக்குமேல் மற்றும் பெரியவர்கள்)  6 கிராம் உப்பு போதுமான‌து. நாம் அன்றாட‌ம் உண்ணும் காய்க‌றி, மீன், ப‌ழ‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே உப்பு நிறைந்திருப்ப‌தால், உப்பின் அள‌வைக் குறைத்து இர‌த்த‌ அழுத்த‌ம் ம‌ற்றும் இத‌ய‌ நோய்க‌ளில் இருந்து த‌ப்பிக்க‌லாமே. 

ந‌ன்றி

Monday, August 30, 2010

ப‌ச்சை மீன் பிர‌ட்ட‌ல் (Green Fish fry)

ந‌ட்ச‌த்திர‌ அந்த‌ஸ்து பெற்ற‌ Hotelலில் செய்யும் சிற‌ப்புமிகு உண‌வு வ‌கையில் ஒன்று உங்க‌ளுக்கு Simpleஆக‌..


தேவையான‌ பொருட்க‌ள்

வ‌ஞ்சிர‌ மீன் துண்டு                                   150g
நெய்                                                                   100g
இஞ்சி                                                                  10g
ப‌ச்சைமிள‌காய்                                              10g
புதினா                                                                 10g
கொத்த‌ம‌ல்லித்த‌ழை                                 25g
க‌ர‌ம் ம‌சாலா                                                       5g   
சீர‌க‌த்தூள்                                                            2g
எலுமிச்சை                                                          1
உப்பு                                           தேவைக்கேற்ப‌

செய்முறை
கொத்த‌ம‌ல்லித்த‌ழை,புதினா,பாதிய‌ள‌வு இஞ்சி,பாதிய‌ள‌வு ப‌ச்சைமிள‌காய் அனைத்தையும் சேர்த்து அறைத்த விழுதில் பாதிய‌ள‌வு எடுத்து வைத்துவிட்டு, மீத‌முள்ள‌ விழுதில் எலுமிச்சை சாறு சேர்த்து பிச‌றி,க‌ழுவிய‌ மீனில் த‌ட‌வி ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

மீத‌முள்ள‌ இஞ்சி,ப‌ச்சைமிள‌காயை ந‌றுக்கி,நெய்யில் வ‌த‌க்கி, மீத‌முள்ள‌ விழுதை சேர்த்து, சீர‌க‌த்தூளிட்டு சிறிது த‌ண்ணீர் தெளித்து வேக‌வைக்க‌வும். உப்பு ச‌ரிபார்த்து, க‌ர‌ம் ம‌சாலா சேர்க்க‌வும்.

வாண‌லில் சிறிது நெயிட்டு மீனை குறைந்த‌ சூட்டில் வேக‌வைக்க‌வும். பின் வேக‌வைத்த‌ ம‌சாலாவை மீனில் த‌ட‌வி ப‌றிமாற‌வும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.
The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/10/03/stories/2009100352030800.htm
http://en.petitchef.com/recipes/starter/pacha-meen-piratal-fid-997157 

Sunday, August 29, 2010

ராஜ‌ இறால் மிள‌கு வ‌றுவ‌ல் (Lobster pepper fry)






தேவையான பொருட்க‌ள் :
ராஜ‌ இறால் (லாப்ஸ்ட‌ர்)                                 2Kg
தேங்காய் எண்ணெய்
வெங்காய‌ம்                                                         100g
இஞ்சி பூண்டு அற‌வை                                      15g
த‌க்காளி                                                                  100g
மிள‌காய்த்தூள்                                                     10g 
ம‌ல்லித்தூள்                                                         100g
ம‌ஞ்ச‌ள்தூள்                                                              5g
சிறிதாய் உடைத்த‌ மிள‌குத்தூள்                     30g
உப்பு                                                                          தேவைக்கேற்ப‌
எலுமிச்சை சாறு பிழிந்தது                                2 ப‌ழ‌ம்
கொத்த‌ம‌ல்லித்த‌ழை                                         20g


செய்முறை
ராஜஇறால் உடையாம‌ல் அதிலிருந்து க‌றியைப் பிரித்து எடுக்க‌வும்,பின் அந்த‌ ஓட்டுட‌ன் கூடிய‌ முழு ராஜ இறாலை க‌ழுவி சிறிது உப்பு,ச‌ர்க்க‌ரையிட்டு வேக‌வைக்க‌வும். க‌ல‌ர் மாறிய‌பின் எடுத்து அல‌ங்க‌ரிக்க‌ (Carnish) செய்ய‌ தனியாக‌ வைக்க‌வும்.


பின் க‌றியை இஞ்சி,பூண்டு அறைவையுட‌ன் ம‌ஞ்ச‌ள்தூள், மிள‌காய்த்தூள், ம‌ல்லித்தூளிட்டு சிறிது எலுமிச்சைப்ப‌ழ‌ சாறுசேர்த்து கிள‌றி ஒரு ம‌ணி நேர‌ம் ஊறவைக்க‌வும்.


வாண‌லில் சிறிது எண்ணெயுட‌ன் வெங்காய‌ம் இட்டு வ‌த‌க்கி, பின் இஞ்சி பூண்டு அறைவ‌யிட்டு வ‌த‌க்கி, பின் ஊற‌வைத்த க‌றியுட‌ன் மிள‌காய்த்தூள், ம‌ல்லித்தூள், ம‌ஞ்ச‌ள்தூளிட்டு வ‌த‌க்கி, த‌க்காளி சேர்த்து பின் மிள‌குத்தூள், உப்பிட்டு கிளறி க‌டைசியாக‌ வெங்காய‌ ரிங்ஸ்,கொத்த‌ம‌ல்லித‌ழையிட்டு இற‌க்கிய‌பின், இந்த‌ ம‌சாலாவை ராஜ‌ இறாலுக்குள் அடைத்து (Stuff செய்து) அல‌ங்க‌ரித்து (Carnish) வைக்க‌வும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.
The followings links to read the above Dish in English