Monday, September 27, 2010

ஹரா பரா கபாப் (Hara Bhara KEBAB)




தேவையான பொருட்கள்

கேரட்                                                      20g
பச்சை பட்டாணி                              20g
உருளைக் கிழங்கு                           20g
காலிஃப்ளவர்                                       20g
பன்னீர் (துருவிய‌து)                        20g
பச்சை மிளகாய்                                  5g
வெங்காயம்                                         20g
பொதினா                                     5கிளை
கொத்தமல்லி                          10கிளை
எலுமிச்சைசாறு                   சிறித‌ள‌வு
முந்திரி பருப்பு                                   5No
மைதா                                                     10g
Bread தூள்                                               10g
எண்ணெய்                               பொறிக்க‌
உப்பு                                தேவைக்கேற்ப‌

செய்முறை


பொதினா,கொத்தமல்லி பச்சை மிளகாயை கெட்டியாக அரைத்துக்கொள்ள‌வும்
உருளைக்கிழங்கு, பச்சைபட்டாணி, கேரட், காலிஃப்ளவர் பொடியாக நறுக்கி, நீராவியில் அவித்து அல்லது வேகவைத்து, நீரை சுத்தமாக வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை சிறிதாக வெட்டி, வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து, உப்பு மைதா இட்டு, பன்னீர், எலுமிச்சைசாறு சேர்த்து கட்லட் மசாலா போன்று தயாரித்து, சிறுவட்டமாக்கி, Bread தூளில் பிரட்டி, அதன்மேல் முந்திரி பருப்பை வைத்து எண்ணெயில் பொறித்தெடுத்து Carnishவைத்து பரிமாரவும்.

ஆங்கில‌த்தில் பார்க்க‌ கீழுள்ள‌ வ‌லைத்த‌ள‌ம் செல்ல‌வும்.

The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/10/24/stories/2009102452630800.htm
http://en.petitchef.com/recipes/starter/hara-bhara-kebab-fid-997136

நம் கவன‌த்திற்கு:
நாளொன்றுக்கு நமக்கு 3Cubs(அதாவது 3மேசைக்கரண்டி)சர்க்கரை போதுமான‌து. நாம் அன்றாட‌ம் உண்ணும் உணவு,காய்க‌றி, ப‌ழ‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே போதுமான சர்க்கரை நிறைந்திருப்பதை நினைவில் கொள்க‌.

நன்றி

0 comments: