தேவையான பொருட்கள்
வஞ்சிரை மீன்(துண்டுகளாக) 150g
தேங்காய் எண்ணெய் 20ml
சோம்பு 2g
வெந்தயம் 2g
சீரகம் 3g
பெரிய வெங்காயம் 40g
சின்ன வெங்காயம் 20g
தக்காளி 30g
பூண்டு விழுது 5g
பச்சை மிளகாய் 2g
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
மிளகாய் தூள் 10g
மல்லி தூள் 10g
புளிக் கரைசல் கெட்டியாக 100ml
தேங்காய் அரவை 25g
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலையிட்டு வெடிக்கவிட்டு சின்னவெங்காயம் சேர்த்து, பின் கட்டமாக வெட்டிய பெரியவெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிண்டி பின் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியபின் புளிக்கரைசல் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் தேங்காய் அரவை,மீன் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, உப்பிட்டு சிறுதீயில் வேகவிட்டு இறக்கவும்.
ஆங்கிலத்தில் பார்க்க கீழுள்ள வலைத்தளம் செல்லவும்.
The followings links to read the above Dish in English
http://www.hindu.com/mp/2009/05/23/stories/2009052352000800.htm
http://en.petitchef.com/recipes/main-dish/malabar-fish-curry-fid-997135
நம் கவனத்திற்கு:
நாளொன்றுக்கு நமக்கு (11வயதுக்குமேல் மற்றும் பெரியவர்கள்) 6 கிராம் உப்பு போதுமானது. நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, மீன், பழங்களில் ஏற்கனவே உப்பு நிறைந்திருப்பதால், உப்பின் அளவைக் குறைத்து இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாமே.
நன்றி
Tuesday, September 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment